கல்ப் கிக் கதைகள் (2)
மா மனிதர்கள் -
குறுங்கதை
எப்போதும் எப்பி ஆன்லைனிலேயே
பலியாய் கிடக்கும் கிக். மூன்று நாட்களுக்கு முன்னதாக எப்' பியில் தனக்கு வந்த ஒரு
முன் தெரிந்திராத பிரெண்ட் ரிகுஸ்ட்டினை கன்பர்ம் குடுத்து உள் சென்று பார்த்த போது
அந்த ஆண் நண்பனுக்கு ஏகபட்ட பெண் தோழிகள் இருந்தனர்.கிக் ஆர்வமிகுதியில் ஒட்டு மொத்த
பெண்களுக்கும் ரிகுஸ்ட் அனுப்ப முயன்றதால்... கிக் கின் அக்குவன்ட் தற்காலியமாக க்ளோஸ்
செய்ய பட்டுவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் கட்டிலில் குப்புற படுத்து கிடந்து “என்ன
பண்ணலாம்” யோசித்தபடி இருந்தான்.
அப்போது அவனை கல்ப்
மொபைலில் அழைத்து லவர்ஸ் டே அன்று பார்த்த இரண்டு பெண்களை பார்த்ததாகவும் அருகில்
இருப்பதாகவும் அழைத்தான். உடனே கிக் அழைத்த இடத்திருக்கு சென்றான்.
கல்ப் கிக் இருவரும்
அந்த இரு பெண்களை பின் தொடர்ந்தனர்...
கல்ப், “டேய்... நாம
அன்னைக்கு பார்த்தபையும் இன்னைக்கும் சரி ரெண்டு பெரும் கேப் விடாம பேசிகிட்டே
இருக்கங்களே எப்படிடா? அதுவும் இங்கிலீஸ் ல”
கிக் “நான்
விசாரிச்சேன்... ரெண்டு பேருமே ஜெர்மன் ரிட்டன்ஸ் ஆ...”
“அப்போ ஜெர்மன்ல
எல்லாரும் இப்படிதான் வாய் வலிக்காம பேசிகிட்டே இருப்பாங்களா”
“அது தெரியல... ஜெர்மன்
என்ன லாங்குவேஜ் பேசுவாங்க.. ஜெர்மன்னு ஒரு லாங்குவேஜ் இருக்குல...”
கல்ப் பதில்
தெரியாமல் முழித்தான்..
“இல்லையா?” என்றான்
கிக்..
டேய் “வெள்ள காரங்க
எல்லாருமே இங்கிலீஷ் தான் பேசுவாங்க”
“அப்படியா... எல்லா
தெரிஞ்ச மாதிரி கத விடாதடா”
“நிஜமாடா.. சரி ப்ரச்சன
வேண்டாம்.. அந்த பொண்ணுங்கள்டயே கேட்டுடுவோம்.. என்ன?”
“அய்யய்யோ... எங்கடா
ரெண்டு பேரையும் காணும்”
“அந்த கோயில் குள்ள
போயிட்டாங்கடா”
கோயிலுக்குள் கூட்டம்
அலை மோதியது....
“அவங்க வெளில
வரட்டும் பேசிடுவோம்... ஏன் அவங்கள யே நம்மல்ட பேசவச்சா எப்படி?” என கண்ணடித்தான் கல்ப்.
“எப்படி டா?”
“அவங்க வெளில கிழட்டி
போட்ட செருப்ப தூக்கிவேற இடத்துல வச்சிடுவோம். அவங்க வந்து கேட்பாங்க நாய் இந்த
பக்கமா தூக்கிட்டு போச்சுனு சொல்லுவோம் என்ன?”
“ரொம்ப சில்லியா
இருக்குடா.. நம்மல மாதிரி மா மனிதர்கள் இப்படி பண்ணா நல்லாருக்காது.. சரி அது
இருக்கட்டும் அவங்க என்ன உன்கிட்ட வந்து தமிழ் ல கேட்பாங்களா... உனக்கு தமிழ தவிற
ஒன்னும் தெரியாது... சரி நமக்கு”
“டேய்.. இங்கிலிஸ் ல
பேசுவேண்டா”
கிக் கேலியாக
சிரித்து கொண்டு “எங்க... ஒரு நாலு வார்த்த இங்க்லீஷ் ல எழுது பாப்போம்” என்று ஒரு
காகிதத்தை பேனாவுடன் கொடுத்தான்
“நாலென்ன ஐஞ்சு
வார்த்த எழுதுறேன் பார்” என்று அதை வாங்கிய கல்ப்
ஐந்து வார்த்தை எழுத அந்த காகிதத்தை
கொண்டு சென்று பெண்களின் செருப்புகளின் அருகில் வைத்துவிட்டு இருவரும் ஓடி மறைந்தனர்...
.
.
.
.
.
German
slippers for free sale
No comments:
Post a Comment