Saturday, April 19, 2014

#முற்றும்

கல்ப் கிக் கதைகள் (3)
#முற்றும்

கிக் மெயிலில் தனது முன்னால் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி இருந்தான்
இரண்டுநாட்கள் கழித்து அதற்கு ஆங்கில நன்றி வந்திருந்தது... தொடர்ந்து எப்படி உனக்கு என் பிறந்தநாள் நியாபகம் இருக்கிறது. என்ற ஒரு வாக்கியமும் வந்திருந்தது. அதற்கு கிக் நான் என்றும் உன் பிறந்தநாளை மறந்ததில்லை என்று பதில் அனுப்பி இதற்கு பதில் வர இன்னம் இரண்டு நாட்களாகும் என்று நினைத்து கொண்டான்.

ஜெர்மன் பெண்களுக்கு தமிழ் தெரிந்ததனால் மொழி பிரெச்சனை இன்றி கல்ப் அதில் ஒரு பெண்ணிடம் ஒரு வார காலமாக பேசிவருகிறான். அப்பெண் தனது பெயர் சொல்ல மறுத்ததால் கதாபாத்திர பெயர் இல்லை. மன்னிக்கவும்.

கல்ப் ஐ அழைத்த அந்த பெண்

“ஏய்... நாம பேசுற விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சிடிச்சி. நீ யாருன்னு கேட்டாங்க”

“எப்படி தெரிஞ்சிச்சு”

“பேஸ் புக்குல முன்னாடி வந்த இரண்டு கதையையும் என் அப்பா படிச்சிட்டார்”

“வாய்ப்பே இல்ல. இந்த எழுத்தாளன் எழுதுறத யாருமே படிக்கிறதில்லை கத விடாத படிக்கிறது வீரமணி, விக்கி தாஸ், தர்மராஜ், எப்போதாவது ரவி மத்தபடி சில பேருக்கு எழுத்தாளனே பர்சனல் மெசஜ் அனுப்பி ‘படித்து சொல்லவும்’ என்று தொந்தரவு பண்ணி படிக்க வைக்கிறான்”

“இல்ல அவங்கள தவிற சில பேரும் தொடர்ந்து படிக்கிறாங்க அதுல என் அப்பாவும் ஒருத்தர். அவர் ஒரு இலக்கிய வாசகர்(அட டே!)”

“அதான் எழுத்தாளன் எல்லாம் கற்பனைன்னு சொல்லிடுறானே அப்புறம் என்ன பிரெச்சனை வர...”

“இது மாதிரி காதல்ன்னு பிரண்ட்ஸ்னு ஒருபொண்ணு ஆம்பள கூட பேசுறது பழகுறது எல்லாத்தையுமே இங்க அசிங்கமா பாக்குறாங்க பேசுறாங்க.. என்னபண்றது”

“யாரு எப்படி பேசுனா என்ன?”

“உனக்கு பிரெச்சன இல்ல அப்பாவே பேசுறாங்க... வேணாம் இந்த எழுத்தாளன் சொல்ற மாதிரி எல்லாம் கற்பனையாவே இருக்கட்டுமே”

“எல்லாத்தையும் கற்பனை ஆக்குறதுல எனக்கு எந்த ப்ரெச்சனையும் இல்ல... எதுவா இருந்தாலும் ஒரு பத்து நிமிஷம் யோசிச்சு சொல்லு”

“இல்ல... எல்லாம் கற்பனைதான்”

“இல்ல நான் போன கட் பண்றேன்.. பத்து நிமிஷம் கழிச்சி கால் பண்றேன்.. நல்லா யோசிச்சு சொல்லு”

என்று கட் செய்தான் கல்ப்..

அதற்குள் கிக் அழைத்து பேசினான்..

“டேய்‘பிறந்தநாள் வாழ்த்து’ அனுப்புனேன் டா அவ தேங்க்ஸ் னு ரிப்ளே பண்ணிருக்காடா.”

“நீயாது நல்லாரு... நான் சொன்ன மாதரியே அனுப்புனியா?”

“ஆமாம் டா ஒரு கவித யோட அனுப்புனேன்.”

“எனக்கென்னமோ சந்தேகமா இருக்குடா இந்த எழுத்தாளன் வேற எல்லாமே கற்பனைன்னு சொல்லிட்டான். உனக்கு வந்த மெயில செக் பண்ணி பாரு”

“என்ன டா சொல்ற எல்லாமே கற்பனையா?”

“நீ விஷ் பண்ணிருப்ப அங்கேந்து எந்த பதிலுமே வந்துருக்காது.. அதாநிஜம்”

“அப்படியா.. நான் உடனே செக் பண்ணி பாக்குறேன் இதுக்கு தான் இந்த எழுத்தாளர்களையே நம்பக்கூடாது எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசியா எல்லாம் கற்பனை புனைவுனு சொல்லிடுவாங்க”

பத்து நிமிடம் கழிந்து விட்டதால் கல்ப் மீண்டும் அந்த பெண்ணை அழைத்தான்.

“ஹலோ.. நான்தான்பேசுறேன்.. யோசிச்சியா என்ன முடிவு பண்ணிருக்க?”

“ஹலோ... யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

No comments:

Post a Comment