Tuesday, February 18, 2014

மொபைல் அழைக்கிறது..



மொபைல் அழைக்கிறது... –குறுங்கதை

·         காலை பதினொன்று இருக்கும்மொபைலில் அழைப்பு... யார் எனக்கு கால் செய்ய போகிறார்கள்? அம்மா வாகத்தான் இருக்கும். அம்மா ஏன் பகலில்? எப்போதும் இரவுதானே பேசுவோம். ஏதோ அன்-நோன் நம்பர் என்று எடுத்தால் “அண்ணா நான் தான்ணா பிலிம் இன்ஸ்டிடுட் ஸ்டுடென்ட் பாலமுருகன்.. நாளைக்கு ஒரு ஷூட்டுக்கு கோப்ரோ வேணும் ரெடி பண்ணிகொடுங்கண்ணா” என்றான். சரி என்று நாலைந்து நண்பர்களுக்கு கால் செய்தால் யாரும் எடுக்கவில்லை. எனக்கு மொபைலில் அழைப்பு வருவது அரிது. அப்படி வந்தாலும் ஓர் இரு ரிங்கிற்குள் எடுத்துவிடுவேன். ஏனெனில் பெரும்பாலும் நான் வெட்டியாகத்தான் இருப்பேன்.வேண்டும்மென்றால் என் நம்பர்க்கு அழைத்து சரி பார்க்கலாம். அப்படியே தவறி வேலையில் இருந்தாலும் அழைப்பை உடனே எடுத்து விடுவேன்.ஏனென்றால் எதையும் தள்ளிபோட பிடிக்காது எதா இருந்தாலும் உடனே பைசல் பண்ணிடனும் எனக்கு. அப்படி போனிலோ நேரிலோ பேசுபவர்களில் சிலர் “என்ன பண்ற?” என்ற கேட்டு வெறுப்பேத்துவார்கள். அப்படி இதுவரை கேட்காதவர் என் அம்மா ஏனெனில் அவளுக்கு நான் எதுவும் பண்ணமாட்டேன் என்பது நன்றாகவே தெரியும். இப்படி என்ன பண்ற? என்று கேட்பவர்களிடம் “டிவி பார்த்தேன், புக் படிச்சேன், பாட்டு கேட்டேன்” என்று சொன்னால் அவர்களுக்கு பிடிப்பதில்லை “ஹாபி என்னனு பெப்சி உமா கிட்ட சொல்ற மாதிரி சொல்ற”என்பார்கள். அவர்களுக்கெல்லாம் வியர்வை சொட்ட கையில் கத்தை பணத்துடன் நிற்க வேண்டும் அப்போதுதான் உழைக்கிறேன் என்று ஒத்துக்கொள்வார்கள். எழுதுவது, படிப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு ‘பண்ற’ லிஸ்டில் இல்லைபோல... அப்படியே நான் சினிமாவில் வேலை பார்கிறேன் என்று சொல்லிவிட்டால் போதும் உடனே அந்த நடிகர் இந்த நடிகை என்று பேசி கடைசியாக கோச்சடையான் எப்போ ரிலீஸ்? என்று கேட்பார்கள். “தெரியாது” என்று சொன்னால் “என்னங்க சினிமால இருக்கீங்க தெரியலங்கறீங்க” இப்படிபட்ட ப்ரெச்சனைகளையும் சந்திக்க வேண்டிருக்குதே என்று மனம் புலம்பும்.தெரியாதவர்கள் தான் இப்படி என்றால் தெரிந்த நபர்களில் சினிமாவிற்கு சம்பந்தபடாத சிலர் என்னை கண்டவுடன் அவர்களுக்கு தெரிந்த சினிமா நடிகர் நடிகைகள் பற்றி அறிந்து வைத்திருந்த கிசு கிசுக்கள் எல்லாம் உண்மையா என்று என்னிடம் கேட்டு தொல்லை பண்ணுவார்கள். இதெல்லாம் போதாதென்று ரூமில் இருக்கும் ஒருவர் ‘தென்றல்’ சீரியலை பார்த்தபடி “சினிமால இருக்கீங்க இதெல்லாம் பாத்து குறிச்சி வச்சிக்கணும்” என்பார். அவர் சொல்வது விளையாட்டிற்கு அல்ல என்பதை அவர் சீரியல்களை சீரியசாக பார்ப்பதை வைத்து அறிந்துகொண்டபோது எனக்கு பகீர் என்றது.என்னிடம் ஒருவர் ஐந்து நிமிஷம் பேசினாலும் ஐந்துநிமிடமும் அவருக்கு சந்தோசத்தை தரவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் இப்படி எங்கு போனாலும் கிசு கிசு, சினிமா அறிவுரை என்று கூறுபவர்களை சிரமத்துடன் வேறு பேச்சிற்கு திசை திருப்ப வேண்டிருகிறது. சரி கோப்ரோ விசயத்திற்கு திரும்பி வருவோம் ராஜா விற்கு அழைத்த போது அவன் எடுத்தான்(அவனாது எடுத்தானே)அதற்கான லிங்க் தந்து மேலும் எனக்கு உதவி இயக்குனருக்காக ஒரு இடத்தில் கேட்டிருப்பதாக கூறி இருவரும் நேரில் சென்று பார்க்கலாம் என்று சொன்னான். ராஜாவிற்கு முன்னதாக ஒருவரிடம் மொபைலில் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்ட கதை ஒன்று இருக்கிறது அதையும் சொல்கிறேன். சிறிது நாட்களுக்கு முன்னதாக சிறப்பாக ஓடிய ஒரு படத்தின் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்கலாமே என்று எண்ணி அந்த இயக்குனர் இணை இயக்குனராக பணி புரிந்தபோது அவருடன் பணி புரிந்த உதவி இயக்குனர்(புரிந்ததா?)ஒருவருக்கு கால் செய்தேன். அவர் எப்படி பழக்கம்? என்றால்... அவர் ஒரு குறும்படத்திற்கு கேமரா செய்யுமாறு என்னிடம் கேட்டு வந்திருந்தார். நான் போன் செய்து என்னை அறிமுக படுத்தி கொள்ள. அவர் சுருக்கமாக “என்ன வேணும்” என்றார். பேச்சுல திமிர் தெரியுதே(முன்பு சந்தித்ததிறக்கும் இப்போது பேசுவதற்கும் பெரிய மாற்றமாக இருந்தது) என்று எண்ணியபடி என் நண்பன் ஒருவனுக்கு உதவி இயக்குனர் வாய்ப்பு வேண்டும் என்று கூறி அதனால் அந்த புது இயக்குனரை சந்திக்க காண்டக்ட் வேணும் என்றேன். “நாளைக்கு போன் பண்ணுங்க” என்று பட்டென்று கட் செய்தார். மறுநாள் போன் செய்தபோது “உங்கள் நண்பர் என்ன செய்கிறார்” என்றார். நான் மேற்கொண்டு பொய் சொல்ல மனமின்றி “வாய்ப்பு எனக்கு தான் வேண்டும்” என்றேன். “நீங்க அச்சிடன்ட் சினிமாடோகிராபரால இருந்தீங்க” “ஆமாம்... ஆனா இப்போ இல்ல.. ஒரு ஷார்ட் பிலிம் எடுத்துருக்கேன்...” “ஏன் பொய் சொன்னீங்க... நா ஒரு பெரிய டீம்ல வொர்க் பண்றேன் என்கிட்டயே பிரெண்ட்குனு பொய் சொல்றீங்க நேத்து..பெரிய டீம் கூட வொர்க் பண்ணனும்னு ஆச படுறீங்க.. பொய் சொல்றீங்க இப்படி... தப்பில்ல(கடுகடு)” என்றார். “வாய்ப்பு கிடைச்சதும் வெளிய சொல்லலாம்னு இருந்தேன்.. அதான் சொல்லல” என்று சொல்ல “நாளைக்கு போன் பண்ணுங்க” என்று கட் செய்தார். மீண்டும் மறுநாள் போன் செய்தேன்... அழைப்பை எடுக்கவில்லை... சில மணி நேரம் கழித்து மீண்டும் டயல் செய்தேன் எடுக்கவில்லை.. கிளிங் என்று ஒரு மெசஜ் வந்தது அதில் அந்த இயக்குனரின் தொலைபேசி எண்  வந்திருந்தது. நான் மீண்டும் அழைத்தேன் நன்றி சொல்ல... சொன்னேன். அப்போது அவர் சொன்னார் “நம்பர் எப்படி கிடைச்சுதுன்னு அவர் கேட்டா நான் கொடுத்தேன்னு சொல்லிடாதீங்க.. யாராவது ப்ரொடக்சன் மேனேஜர்ட வாங்குனதா சொல்லிடுங்க” “சரிங்க நான் அப்படியே சொல்லிடறேன்”என்றேன். இதான் அந்த கதை அய்யோ! அய்யோ!.

No comments:

Post a Comment