Friday, February 14, 2014

கல்ப்-கிக் கதைகள்

கல்ப்-கிக் கதைகள்: குறுங்கதை (1)
இந்தி சென்ட் ப்ரபோஸல்– காதலர் தினம் 

·         காதலர் தினத்தில் காதலி இல்லாததில் கவலை தோய்ந்த முகத்தோடு நண்பர்கள் கல்ப், கிக் இருவரும் மாலை வேளையில் பார்கினுள் நுழைந்தனர். பார்க்கின் அமைப்பு மத்தியில் புல்வெளியும்(பூக்களே இல்லாத பார்க்) சுற்றிலும் சிமின்ட் தரை அமைப்பில் நடை பாதையும் கொண்டது. புல்வெளிகளில் சில காதல்ஜோடிகள் அமர்ந்திருந்தனர். நடைபாதையில் வயது,பால் ஒற்றுமையின்றி பலர் உலா அதாவது வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். புல்வெளியில் அமர்ந்திருந்த கல்ப் கிக்கை பார்த்து வியர்க்க வாக்கிங்நடந்து கொண்டிருந்த இரு பெண்களை காட்டி “நல்லாருக்கால” என்றான். கல்ப் கூற்றை கிக்கும் வழிமொழிந்தான். இருவரும் பல் இளித்துக் கொண்டு யாருக்கு எந்த பெண் என தேர்ந்தெடுத்து கொண்டபடி அந்த பெண்களிடம் பேசிவிட முடிவெடுத்துக் கொண்டனர்.அப்பெண்கள் சுற்றிகொண்டிருபதற்கு எதிர் திசை அமைப்பில் பார்க்கைசுற்ற தொடங்கினர். அப்போது கல்ப்

“ரெண்டுபேரும் நார்த் இந்தியா மாதிரி இருக்குல”

“ஆமா.....”

“உனக்கு ஹிந்தி தெரியுமா?”

“எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஏக் கௌ மே ஏக் கிசான் ரக தாத்தா.... உனக்கு தெரியுமா?”...

“தோடா தோடா... என் கூட வேல பாக்றவங்க ஹிந்தி தாண்டா பேசுவாங்க”

“அப்படியா... என்ன பேசுவ”

“நேரா போறோம் ஆப்கா னாம் கியா ஹே?...தும் கப்படா அச்சிகே”

என்று கல்ப்- ஹிந்தியை கற்பழித்து கொண்டிருக்க
கிக்கும் தனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியை பங்கிற்கு அடுக்கினான்

“மே தும்சே பியார் கர்தி ஹு... சாதி... சாத்.. ஆமா உஸ்னே னா என்ன?”

“உஸ்னே னா அங்க டா”

“டேய்.. இதர்.. உதார் னா தான் அப்படி வரும்”

“நாம தமிழ்ல அங்க இங்க...சொல்றோம் அப்புறம் அந்த இந்தனும் சொல்றோம் இல்லையா அப்படிதாண்டா ரெண்டும்”

“டேய்... கிட்ட வந்துட்டாங்க... நீயே பேசிடு ஓகேவா உனக்கு தான் ஹிந்தி நல்லா தெரியுது” என்றான் கிக் பயத்துடன்..

கலப்பும் கிக்கும் பெண்களை நெருங்கிவிட அவர்கள் பேசிகொள்வது இருவருக்கும்  தெளிவாக விழுந்தது... இருவருக்கும் எதிர் பாராததாகவும் இருந்தது.

“எப்...தே ஆர்கனைஸ் எவரிதிங்... இட் வில் கோன ராக்கிங்..... அக்ஷ்வலி த....” என்று சப்தமும் ஒடுங்க இரு பெண்களும் கல்ப்பையும் கிக்கையும் கடந்து சென்றுவிட.

கல்ப் கிக் இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்து

“உனக்கு இங்கிலிஸ் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டுஅடுத்த சுற்றுக்கு ஆயத்தம் ஆனார்கள். 

No comments:

Post a Comment