Wednesday, January 15, 2014

#காஸ்ட்பிட்டல்

காஸ்ட்பிட்டல்பேச்சுலர் ஜுரம்

·          திட்டமிடுதலுடன் தொடங்கிய காலையில் நந்தனம் செல்ல தயாரான நிலையில் எல்லாவற்றையும் மூட்டைகட்டி ரூமிலேயே படுத்துக்கொண்டேன் நீண்டநாள் பிறகு கடும் ஜுரம் இரவு கொசு கடி அதிகம் இருந்ததால் அது காரணமாக இருக்குமோ? என பயம். உடல் இதுவரை இல்லாத அளவில் வலித்தது. ரூமில் தண்ணீர் மட்டும்தான் இருக்கிறது ஹோட்டல் போகலாம் என்றால் உடல் வலி வேறு. ரூமில் தற்போது நான் மட்டும்தான் இருக்கிறேன் எப்படி இருந்தாலும் சாப்பிட வேண்டும் என கிளம்பி சென்று இட்லி கிடைக்காமல் இடியாப்பம் பார்சல் வாங்கி உடன் இரண்டு கிரோசின் வாங்கி ஒன்றை சாப்பிட்டு போட்டுக்கொண்டு தூங்கிவிட்டேன். மூன்று மணிக்கு எழுந்தால் ஜுரம் குறைந்தது மீண்டும் அதிகரித்திருந்தது மீல்ஸ் சாப்பிட முடியாது என்று நினைத்து வீட் ப்ரெட் கிடைக்காமல் வைட் ப்ரெட் வாங்கி வந்து கொஞ்சம் தின்றுவிட்டு இரண்டாவது கிரோசின் போட்டுக்கொண்டேன். இருந்தும் சுத்தமாக பயனில்லை அது. மணி ஐந்து மிச்சம் இருந்த்த ப்ரெட்டில் எறும்பு மொய்க்க எல்லாவற்றையும் தட்டிவிட்டு மீண்டும் உள்ளே வைத்து விட்டேன். சாப்பிடவில்லை. ஜே ஜே நகர் போலிஸ் ஸ்டேஷன் வழியில் ஹோச்பிடல் இருக்கும் என்று சிரமப்பட்டு அங்கு சென்றேன் போய் சேர ஆறு மணி ஆனது. D.தனசேகர் M.S மாலை 6.30 டு 9.௦௦ என்று இருக்க உள்ளே சென்றேன் ஹோச்பிடல் உள்ளே ரிசப்சனில் ஒரு வயதான  பெண்மணியும் ச்வீபெர் பெண் ஒருத்தியும் மட்டுமே இருந்தனர். பேசென்ட் என்று ஒருவர் கூட இல்லாதது பீதியை ஏற்படுத்தியது. நான் தனசேகர் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர் “இன்று கிடையாது டூட்டி டாக்டர்தான் என்றபடி என்ன பிரெச்சனை?” என்றாள் அந்த பெண்மணி. நான் சொன்னேன்.... அப்போதுதான் இன்று ஞாயிற்று கிழமை என்பது நினைவு வந்தது. தர்மா மீட்டரை வைத்து பார்த்து விட்டு “100 இருக்கு” என்றாள்.. நான் சிரித்தேன். “வா” என்று இடுப்பில் ஒரு இன்ஜெக்சன் போட்டுவிட்டாள். அடுத்து அவளாகவே மாத்திரைகள் குடுத்தாள். பின்பு பேபர் எடுத்து எல்லாவற்றிற்கும் கணக்கு போட்டாள். பீஸ் என்று ரூ 170 எழுதினாள். நான் “எப்படி?” என்றேன். “டாக்டர் பீஸ் 100 + இன்ஜெக்சன் 70” என்றாள். “நான்தான் டாக்டர் பாக்கலையே” என்றேன். “இல்ல அதுக்கும் சேர்த்துதான் சார்ஜ் பண்ணனும்” என்றாள். “அப்படியா...” மாத்திரைக்கும் என மொத்தமாக  ரூ 236 கொடுத்துவிட... அப்போது அந்த பெண்மணி சொன்னாள் “நீங்க வேணும்னா இன்னைக்கு ஈவ்னிங் குள்ள எப்ப வேணும்னாலும் வந்து டாக்டர பாக்கலாம். அதுக்கு காசு வாங்கமாட்டோம்”. நான் கேட்டேன் “உங்க டூட்டி டாக்டர் லேடி யா?”. “இல்ல ஜென்தான்”....  “அப்ப நான் வரமாட்டேன்”.    


No comments:

Post a Comment