Wednesday, January 15, 2014

#எ கேர்ள் வித் ஒயின்

எ கேர்ள் வித் ஒயின் 
2014 புதுவருடம் பிறந்துவிட்டது நான் ஒவ்வொரு புதுவருடத்தின்போதும் சென்னையில் இருக்க ஆசைபடுவேன் ஆனால் அதற்கான வாய்ப்பு அமைந்ததில்லை இந்த முறையும் எனது சொந்த ஊரான மன்னார்குடி யில் இருக்கிறேன்.நியூ இயர்ரில் அனுபவ படாத ஒன்றை செய்யலாம். என்ன செய்யலாம்? என்று யோசிக்க. திடீரென ஒரு சிந்தனை நியூ இயர்ரை சிறப்பாக ஆக்க யாராவது பெண்ணுடன் ஒயின் குடித்தால் என்ன? என்று. உடனே விஜி வீட்டிற்க்கு சென்று அவளிடம் அதை சொன்னேன். ஏனெனில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு அவள் எனக்கு போன் செய்தவள்,  வீட்டிற்கு அவளது ரிலேசன் பெண்கள் சிலர் வந்துள்ளதாகவும் எல்லோரும் பீர் குடிக்க ஆசைபடுவதாகம் கூறி என்னை வாங்கி வர சொன்னாள். ஆனால் நான் அப்போது வாங்கி தரவில்லை. இப்போதய எனது ஆசையை விஜியிடம் சொல்ல அவள் “விளையாடுறியா முடியாது, அப்போ என்னோட கசின் கேட்டா அதனால கேட்டேன் ஆனா அப்பவே எனக்கு இஷ்டம் இல்லை.” நான்: “அப்போ கசின் பொண்ணு எங்க இருக்கானு சொல்லு அவ கூட ஒயின் குடிக்குறேன்” என்றேன். “விஜி, அவளுக்கு ஆள் இருக்கு” என்றாள். இது என்ன பஸ்ல இடம்போட்டு இங்க ஆள் வருதுன்னு சொல்றமாதிரி இருக்கேன்னு நினச்சுகிட்டேன். மேலும் விஜி சொன்னாள் “அவளது கசின் பெண்ணின் காதலன்(ஆள்) மிகவும் பாவமாம், நல்லவன், குடிக்கமாட்டனாம்...” அவனா பாவம் அவள் தான் பாவம்... அடடா! என்னை போலவே நியூ இயர் கொண்டாட வழியில்லாம் எங்கோ அந்த பெண் தவித்துக்கொண்டிருப்பாள்

No comments:

Post a Comment