மழை + பாடல்
·
டிவியில் கருப்பு
வெள்ளை பாடல். கதாநாயகனும் நாயகியும் மழை எபெக்ட்ல் யாருமில்லாத பூங்காவினுள்
சுற்றிதிரிந்தபடி பாடிகொண்டிருக்கின்றனர்.
குளிரில் இருவர் உடலும் நடுங்குகிறது. காதலி விலகி ஓடுவதும் காதலன்
விரட்டி பிடிப்பதும் என காமம் ததும்பும் பாடல் அது. ஒரு கட்டத்திற்கு மேல் பொருக்க
முடியாத காதலன் காதலியை மடக்கி அணைத்து கன்னத்தோடு கன்னம் வைத்து உரசுகிறான்.
மீண்டும் காதலி பாடிக்கொண்டே விலகி ஓட காதலன் விரட்டி பிடித்தான். காதலியின்
புடவையை விலக்கி இடை வரை குனிந்து முகம் வைத்து அந்த இரட்டை அர்த்த வரியை பாடுகிறான்
காதலன். மீண்டும் காதலி விலகி ஓட்டம். மீண்டும் காதலன் விரட்டி பிடித்து
மடக்கினான் இந்த முறை காதலி எங்கும் தப்பமுடியாது என்கிற நிலை. காதலன் தனது மேல்
கோட்டினை கழற்றுகிறான்...கழற்றுகிறான்.... கழற்றியவன் குளிரில் நடுங்கி
கொண்டிருந்த காதலியை போர்த்தி தோளில் கைபோட்டு அழைத்து சென்றான். இருவருமாக லாங்
சாட்டில் நடந்து செல்ல... பாடல் முடிவடைகிறது. ஏமார்ந்தது காதலி மட்டுமல்ல
நானும்தான் அட போங்கடா!...(பீப்)... என்று சானெலை மாற்றிவிட்டேன்.
No comments:
Post a Comment