Monday, May 12, 2014

டெமோ

#டெமோகுறுங்கதை

ஒரு திரைபடத்திற்கான திரைகதை எழுதியபின்பு முதலில் என்ன செய்யலாம் என்று யோசித்து திரைகதையிலிருந்து ஒரு காட்சியை(எளிமையாக எடுக்க கூடிய) எடுத்து கொண்டு ஒரே நாளில் அதனை படமாக்கி மேற்படி வேலைகள் செய்தால் தயாரிப்பாளரிடமும் கதாநாயகர்களிடமும் காண்பிக்கலாம் வசதியாக இருக்கும் என்றபடி டெமோ ஒன்றை எடுக்க திட்டமிட்டேன். திரைகதையை ஊரில் இருந்தபடி எழுதிய போதே கதையை கேட்ட கொஞ்சம் பழக்கம் உள்ள இரு நண்பர்கள் பிரதாபும் தினேஸும் கதை பிடித்திருப்பதாக என்னுடன் பணியாற்ற விரும்புவதாக கூறி என்னுடனே சென்னை வர முடிவெடுத்து ஒரு சமயத்தில் வந்தே விட்டோம். அசோக்பில்லரில் பிரதாப் நண்பர்கள் தங்கிருந்த அப்பார்ட்மென்டில்தான் நானும் பிரதாப்பும் ஸ்டே. தினேஷ் மட்டும் பவர் ஹவ்ஸ் அருகே மேன்சனில் தங்க முடிவெடுத்தான். குறிப்பிட்ட எளிமையான காட்சி எப்படி இருக்க வேண்டும் என்று முதலில் முடிவெடுக்க வேண்டும். அதாவது காட்சியில் குறைந்த கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். காட்சிக்கான களம் ப்ரெச்சனை இல்லாமல் எளிமையானதாக இருக்க வேண்டும். கூட்டமில்லாத ரோடு, வீட்டினுள் இப்படியாக. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் காவல் துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதிக்கு கல்லூரி மாணவனர்களாக இருந்தால் நலம். இல்லையெனில் அதிக பணம் இழக்க நேரிடலாம். அடுத்து காட்சியில் களம் மாற்றம் பெறாமல் இருத்தல் நலம். ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து விடலாம். அடுத்து நடிக்க போகும் கதாபாத்திரங்களுக்கு முன் நடித்த அனுபவம் இருந்தால் ‘டேக்’ அதிகம் பெறாமல் காட்சியை எடுத்து முடிக்க வசதியாக இருக்கும். மேலும் அவர்களால் கதாபாத்திர தன்மையை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் அல்லவா. இத்தகைய கட்டுபாடுகளுக்கிடையில் காட்சியும் பார்ப்பவர்கள் ரசிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்கிற யோசனையுடன் ஒரு காட்சியை தேர்வு செய்தேன். மொத்த திரைகதையில் தனிப்பட்ட காட்சி எதுவும் கதையின் தன்மையை சொல்லும் விதமாக இல்லை. ஒரு காட்சியை மற்றொரு காட்சியுடன் இணைத்துதான் ரசிக்க முடியும் என்பதாகவே இருந்தது. எனவே நான் தேர்வு செய்தது இரண்டு காட்சி. இரண்டு காட்சிக்கும் இரண்டு களம் தேவை. ஒன்று பீச் மற்றொன்று ரெஸ்டாரென்ட் இரண்டும் அருகருகே இருந்தால்தான் காட்சியை ஒரே நாளில் முடிக்க முடியும். எனவே  படப்பிடிப்பிற்கான களமாக பெசென்ட் நகரை தேர்வு செய்தேன்.
அடுத்து கதாபாத்திர தேர்வு. கூத்துப்பட்டறையில் இருந்து ஒரு மாணவனை நாயகனாக தேர்வு செய்தாகியது. அடுத்து நாயகிக்காக பெண் தேட இறங்கினோம் மூவரும். எனக்கு தெரிந்த சினிமா வட்டாரத்திலிருந்து வந்த பதில் எல்லாம் பசங்க எவ்ளோ பேர் வேணாலும் இருக்காங்க ஆனா பீமேல் கிடைக்க மாட்டாங்க என்பதுதான். பிரதாபின் நண்பர் பிரபு ஒரு பெண்ணை சொன்னார். பெண் சன் டிவி யின் அலுவலகத்தில் பணி புரிகிறாள். பெண்ணிடம் பேசி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டோம். நாயகி வீட்டிற்கு நேரில் ஒரு விசிட்டும் செய்து விட்டோம். நாயகன், நாயகி, நண்பர்கள், என அத்தனை பாத்திரங்களும் ரெடி என்கிற நிலையில். கேமரா தயார் செய்யும் நேரத்தில் எலக்சன் நேரம் போலிஸ் பிரெச்சனை இருக்கு. முடியாது தல. கேமரா மாட்டிக்கும் தல. சரி எலக்சன் முடியட்டும் என படப்பிடிப்பை தள்ளிபோட முடிவெடுத்து ஊருக்கு மூவரும் கிளம்பிவிட்டோம்.
எலக்சன் முடிந்த மறுநாளே கேமரா மேன், கேமரா, கதாபாத்திரங்கள் என்று ஒவ்வொருவாராக அழைக்க. நாயகி பெண் கால் அழைப்பை எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பெண் அவளது ஆண் நண்பன் அழைப்பை எடுத்தார். இந்த இடத்தில் இதை சொல்வது அவசியம் முதன் முதலில் நாயகியிடம் பேசியபோது ஒரு எண் தந்து மேனஜர் நம்பர் அதை தொடர்பு கொள்ளுமாறு சொல்லி இருந்தார். பிரபு விடம் அந்த எண்ணை காட்டியபோது அது அவளது ஆண் நண்பனின் எண் எனவும் பிரபுக்கு நண்பன் எனவும் தெரியவந்தது. பின் வரும் இடங்களில் அவரை நாம் மேனேஜர் ஆகவே பார்க்கலாம் மேனேஜரிடம் பேசியபோது நாயகி பிஸி என்று வரிசையாக தேதியை தள்ளிக்கொண்டே செல்ல நான் மே 1 ஓகே வா? இல்ல பாஸ் அன்னைக்கு ஹாலிடே(உழைப்பாளர் தினம்) அவங்க ஒர்க் பண்ண மாட்டங்க. 2 தேதி ஓகே என்றார். கன்பார்மா? மத்த அரேஞ்ச்மென்ஸ் இருக்கு. கன்பார்ம் ஜி. நானும் சரி என்று மற்ற ஏற்பாடுகளை கவனித்தேன். எதற்கும் முன்னதாக நாயகி நம்பருக்கு நாள் நாள் என காத்திருந்து பேசி. உங்க மேனஜர் 2 தேதி டைம் சொல்லிருக்காரு வந்துடுவீங்களா? என்னைக்கு 2 ஆ.. ஓகே ஓகே அன்னிக்கே வச்சுக்கோங்க. மீண்டும் நாங்கள் மூவரும் சென்னை சேர்ந்தோம்.
முப்பது, ஒன்று என்று நாயகி நம்பரையும்.. மேனேஜர் நம்பரையும் தொடர்பு கொள்ள. மாற்றி மாற்றி ரிங் சப்தம் மட்டும்தான் மிச்சம். எப்பீயில் பேச முயல. அவள் எல்லா மெசேஜ்களையும் படித்தவர் எந்த பதிலும் வரவில்லை. தேதி மே ஒன்று இரவு. பிரபு விடம் பேசியபோது. நீங்க ஷூட்டிங் முதநாளுதான் கால் பண்றீங்கலாம். அவங்க எங்கயோ வெளியூர் போறாங்களாம் மூனு நாள் நாலுநாள் ஆகுமா. அடுத்ததாக நாயகன் வேலூரில் இருந்து இரவு வந்துவிட. அவரை அடுத்த நாள் வரை காத்திருக்க விட்டு வேலூருக்கு திருப்பி அனுப்பினோம். பட்ஜெட் காசெல்லாம் கரைந்தது. இரண்டாம் தேதி இரவு எப்பீ யில் நாயகி பல போடோஸ்களை அப்லோட் செய்ய. அதில் பிறந்த நாள் கேக்கில் புகைபடம் அட்சாகி அதில் நாயகி தோளில் மேனேஜர் கை போட்டபடி காட்சி தந்தார். அடுத்து மேனேஜர் கேக் வெட்டி நாயகிக்கு ஊட்டி விடுவது என்பதை போல போட்டோ என கலை கட்டியது. அதன் பின் நாயகிக்கு எப்போது கால் செய்தாலும் எடுப்பதில்லை.
அடுத்ததாக ஆர்டிஸ்ட் ஏஜென்ட் என்று ஒரு எண்ணிற்கு பேச அவன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு. ஒரு நாள் பேமென்ட் மட்டும் ஏழாயிரம் என்றான். எல்லாரும் ஐடி ல வேல பாக்றவங்க பாஸ். நீங்க குடுக்குற பேமென்ட் அவங்களுக்கு பாக்கெட் மணிக்கு தான் அதனால குறைச்சிக்க மாட்டங்க பாஸ் என்றபடி டயலாக் இருக்கா எவ்ளோ இருக்கும் என்றார். அப்போ ஏழாயிரம் குடுத்தாலும் டயலாக் பேசமாட்டீங்களா? என்று பயந்து எங்களது பட்ஜெட் மொத்தமே பத்தாயிரம் தான் பாஸ் என்றேன் அவர் பாணியில்.
பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்றால் குறைந்தது ஐயாயிரம் வேண்டும் என்கிற நிலை வந்தது. ஷூட்டிங் தள்ளிப்போக இந்நிலையில் பட்ஜெட் பணம் குறைந்து கொண்டிருந்தது. இறுதியாக சினிமாவில் அட்மாஸ்பியர் அர்டிஸ்ட் ஏஜென்ட் ஒருவரை பிடித்து ஒரு பெண்ணை ஷூட்டிங்கில் நேரடியாக சென்று பார்த்து எங்களது ஷூட்டிங்கிற்கு தேதி முடிவெடுத்தோம். குறிப்பிட்ட தேதி வருவதற்குள் ஏஜென்ட் இரண்டாயிரத்திலிருந்து இரண்டாயிரத்தி ஐந்நூறு ரூபாய் குடுக்க வேண்டும். பெண்ணிற்கு இரண்டாயிரம் எனக்கு ஐந்நூறு என்றார். வேறு வழியின்றி நாங்களும் ஒத்துகொண்டோம். மே ஆறு சூட் என்று முடிவானோம். ஆனால் ஐந்தாம் தேதிதான் வந்தது பிரெச்சனை. பெண் நாலாயிரம் வேண்டும் என்று கூறுவதாக சொல்ல. நாங்கள் மத்த அரேன்ஜ் செய்த இடங்களில் மீண்டும் வீணாக பணம் அழுக வேண்டுமோ என பயந்து அந்த பெண்ணிற்கு கால் செய்ய அவள் எடுக்கவில்லை. இப்படியாக போனால் மொத்த பணமும் தீர்ந்து மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும்தான் என்று ஏஜென்ட்டிடம் வேறு யாரும் பார்க்க முடியுமா பழைய ரேட்டுக்கே பாருங்க என்று கேட்க. அவரும் ஒரு பெண்ணை நேராக சந்திக்கலாம் என்று வள்ளுவர் கோட்டம் வரசொன்னார். அங்கு போன நாங்கள் அப்போது தான் முதன் முதலாக ஏஜென்டை  சந்தித்தோம். கையில் ஹேன்ட் பேக்குடன் வாயில் பான்பராக் போட்டுகொண்டு அருகில் குண்டான பெண் ஒருத்தியுடன் நின்று இவங்க தான் ஓகே வா என்று கேட்க. பிரதாப் நானும்  யோசித்து சொல்றோம் என்று அங்கிருந்து நகர்ந்து டீ கடையில் நின்று சிரித்து கொண்டோம். சரி நாளைக்கு ஷூட்டிங் கிடையாது இப்போ என்ன பண்றது என்றபடி யோசித்து கொண்டிருந்த நிலையில். முன்பு ஏஜென்ட் மூலமாக பார்த்த பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது. கால் பண்ணிருந்தீங்களா சூட்ல இருந்தேன் சொல்லுங்க. ஏங்க நாளைக்கு உங்களால பண்ண முடியாதா? இல்லங்க எனக்கு நிறைய செலவு இருக்கு. பாமிலியே இதுலதான் நான் ரன் பண்ணனும். ஆயிரத்தி இரனூறுலாம் பத்தாது... என்னது நாங்க உங்களுக்கு இரண்டாயிரத்தி ஐந்நூறுல பேசுனோம். பாத்தீங்களா அவர நீங்க ரொம்ப கஷ்டபடுறீங்க பைக் இல்லாம பஸ்ல தான் வரீங்க! அப்படி இப்படின்னு சொன்னாரு என் பிரெண்ட்ஸ்லாம் ஏன் இவ்ளோ கம்மியா வாங்குற. இரண்டாயிரம் கேளுனு சொல்றாங்க. எல்லா ஏஜென்ட்டும் கமிசன் பாப்பாங்க ஆனா இவர மாதிரி யாரும் ஏமாத்த மட்டங்க என்று அந்த பெண் புலம்பி தள்ளினால். சரி விடுங்க நாங்க அவர்ட பேசுன ரேட் தரோம் சூட் வரீங்களா? வரேன். உங்க கூட யாரும் ஹெல்ப்க்கு வருவாங்களா? ம்ம்.. என்னோட லவர் வருவாரு. அவருக்கு நாங்க ஏதும் தரணுமா!. நான் என் லவ்வர கூட்டிட்டு வரதுக்கு ஏன் நீங்க தரீங்க.. அய்யோ உங்களுக்கு இன்டஸ்டரி பத்தி தெரில இப்படிலாம் இருந்தீங்கனா உங்கள ஈசியா ஏமாத்திடுவாங்க. நானும் இப்படித்தான் இருந்தேன் இப்பதான் எதோ தெளிவா இருக்கேன். சரி ஷூட்டிங் வந்துடுங்க மறக்காம. நீங்க நைட் ஒருதட போன் பண்ணி கன்பார்ம் பண்ணிடுங்க சரியா?

எழுத்து

Gt. சத்யா 

1 comment: