#ஹஸ்மதி#
#திருவிழா ஒரு தொடர்கதை#
சின்னு அத்திருவிழாவில் அம்மா அப்பாவுடன் வந்திருந்த குழந்தைகளை கண்டதும் தனது அம்மா எங்கே என அப்பாவிடம் கேட்கதொடங்க…. அப்பாவோ இறப்பை,மரணத்தை சிறுமிக்குஎப்படி சொல்லி புரியவைப்பது... எத்தனை முறை சொல்வது.... என்று எண்ணிக்கொண்டார். அப்பாவிற்கு திருவிழாவிற்கு வந்திருந்த இளம் நங்கைகளும் திருமணம் ஆகியும் இளம்மங்கைகளாகவே காட்சி தந்துகொண்டிருந்த பெண்களுமே காட்சிப்பொருளாகி போனார்கள். அதிகபடியான பெண்கள் சூழ்ந்த இடத்தில் எந்த ஆணின் சிந்தையும் சலனப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அவர் திருமணம் செய்து கொள்ள எண்ணிய முதல் பெண்ணை இங்குதான் முதன் முதலாக பார்த்தார் அவர் இதுவரை குறைந்தது மூன்றோ நான்கோ பெண்களை கண்டு திருமணம் செய்துகொள்ள ஆசைபட்டிருக்கிறார் ஒருவகையில் இது எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயல்பான ஒன்றாக இருக்கலாம் அன்று அந்த பெண் தாவணியில் வந்திருந்தாள்.பாவாடை தாவணி அந்த ஊரினில் அப்போதே வழக்கொழிந் திருந்த சமயம் அது, அந்த காலத்தினை யாரும் மிகவும் பழங்காலமாக எண்ணிவிடவேண்டாம் அப்போது அந்த பெண் ஒருத்திதான் திருவிழா கூட்டத்தில் தாவணியில் வந்திருந்தவள் மற்ற பெண்கள் அனைவரும் பெருநகரத்திற்கு ஈடான அளவில் நவீன ஆடை விசயங்களில் தேர்ந்தவர்கள். அன்று அவனது கவனத்தினை தனித்துவமாய் ஈர்த்தது தாவணிதான் அதை அவள் நளினமான முறையில்தான் அணிந்திருந்தாள். தற்போதும் தாவணியில் வேறு ஒருவர்கூட இல்லை என்றாலும் எப்போதையும் போல பெண்கள்கூட்டத்திற்கு குறைவில்லை. பள்ளி, கல்லூரி பெண்கள்முதல் கணவனுடன் வந்திருந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் இருந்த பெண்கள் என எதுவும் மாறவில்லை ஆனால் மனைவி என்ற உறவில்லாமல் ஒரு குழந்தையுடன் திருவிழாவிலே அப்பாவாக வந்து நிற்கும் ஒருவனது மனம் எதிர்பார்க்க கூடியது என்னவாக இருக்கமுடியும். திருவிழாவிற்கென ஒதிக்கி வைத்திருந்த ஐநூறு ரூபாயும் தற்போது செலவாகிபோனது இனி வீட்டிற்கு திரும்பியாக வேண்டும். சின்னு அப்பாவிடம் பின்னால் இழுத்துவிடபட்டவுடன் முன்னே செலுத்தப்பட்டு மோதினால் பெல்டி அடிக்கக்கூடிய நவீன மோட்டார் பொறுத்த பட்டிருப்பதாக வியாபாரி கூறிய கார் பொம்மையினை கடைசியாக கேட்டிருந்தாள். ஏற்கெனவே வாங்கி வச்சிருக்குற ரப்பர் கிளி பொம்மையை காட்டி “இது போதுமேமா காசில்ல சின்னு” என்றார். மேலும் அவர் ஏதோ ஒரு துடுப்பினை அழுத்த அந்த கிளி சப்தத்துடன் குதித்தது. சின்னு அதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை கடையைவிட்டு நகரமுடியாது என்றபடி அழத்தொடங்கிவிட்டாள். பல சமாதானங்களுக்கு பின் இறுதியாக சின்னுவின் கன்னத்தில் அடிவிழுந்தது, பின் சின்னு வாயிலுக்கு இழுத்து செல்லபட்டாள் அடித்ததை எண்ணி மனம் வருந்திய அப்பா சின்னுவிடம் தன் பணமற்றநிலையை கூற... பிறகு வாங்கிதருவாதாக மன்னிப்பு கேட்டவர் சின்னுவின் கைகளை இழுத்து தன்னை அடிக்க சொன்னார்.... சின்னு கையை இழுத்து கொண்டவளாய் “எனக்கு அந்த கார் வேணாம்பா” என்றாள். அப்பா பெருமிதமாய் அவளை அன்புடன் அனைத்துகொண்டார்.
*
#அப்பாவின் கல்யாண கதை#
பாலாஜியின் முகத்தில் தாடி அடர்ந்திருந்தது, எடுக்க வேண்டிய அவசியமும் தற்போது வந்துவிட்டது. பாலாஜிக்கு இன்று பெண் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தும் தாடியை எடுக்க மனம் வரவில்லை... அவனுக்கு எண்ணம் “இருந்துட்டுபோகட்டுமே....”
“இது வெறும் சம்ரதாயம்தான், வந்து பாரு பொண்ணு புடிக்கலேன்னா வேற இடத்துல பாக்கலாம்....” பாலாஜியின் அப்பா ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். தாடியை எடுத்த முகத்தினை கண்ணாடியில் பார்த்தவுடன் பாலாஜிக்கு பார்க்க போகும் பெண்ணை பற்றிய கற்பனைகள் அரும்பியது.
“நான் பொண்ணுகிட்ட தனியா பேசுவேன்”
“எதுக்கு டா?”
“அத நான் பொண்ணுகிட்ட சொல்லிக்கிறேன்”
“ஏதோ... ஆனா அங்க வந்து உன் லவ் பெய்லியர் கதைய சொல்லிக்கிட்டுருக்காத.. என்ன?”
வீடெங்கும் அலங்கார பெண்கள்... சுற்றி திரிந்தனர். யார் தனக்கான பெண் என்று பாலாஜிக்கு அறிந்துக்கொள்ள இயலவில்லை... பெண்ணை பார்தாகியது. பாலாஜியின் திருமணம் குறித்த கற்பனைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத பெண்தான். “நான் பொண்ணுகிட்ட தனியா பேசணும்” மௌனம்... கேட்க கூடாததை கேட்டுவிட்டோமோ? என்று எண்ணிகொண்டான்.
“உங்களோட படிப்பு, வேலை பத்திலாம் தெரிஞ்சிக்கிட்டுதான் வந்துருக்கேன்... நாம வேற ஏதும் பேசுவோம்... என்ன பாத்துடீங்க...அப்புறம் வேற... என்ன உங்களுக்கு புடிச்சிருக்கா?... என்ன?”
“புடிச்சிருக்கு... வேற என்ன தோனனும்” என்றாள் தெளிவாக.
“எனக்கு கல்யாணத்துல விருப்பமே இல்ல... வீட்ல கம்பல் பண்ணாங்க.. வேற வழி இல்லாம...”
“எனக்கும்தான்... அதே ப்ராப்ளம்...” சிரித்தாள்.
“ஏன் நீங்க யாரையும் லவ் பண்ணீங்களா?”
“இல்ல... நான் அப்படி சொல்லல”....... “நீங்க சொல்றத பார்த்தா நீங்க யாரையோ லவ் பண்ணிருகீங்க போல... அம் ஐ ரைட்?”
“இல்ல இல்ல...” சிரித்தான்.. “வேற ஏதும் பேசுங்க..ஏதோ தனியா பேசணும்னு தைரியமா சொல்லிட்டேன் ஆனா..”
“என்ன பேசுறது... வெளில அவ்ளோபேறு இருக்காங்க... பேச்சே வரல” என்றாள் சிணுங்கலாக,
“அப்போ எல்லாரையும் கிளம்ப சொல்லுங்க.. கல்யாணத்துக்கு முன்னாடியே டிஸ்டப் பண்றாங்களே”
“நீங்க நல்லா பேசுறீங்க” என்றாள் புன்னகையுடன்... பாலாஜி அவளை பார்த்தான்... அவள், அவனது முகத்தை பார்க்காமல் குனிந்த தலையுடன் வெட்கத்தில் புன்னகைத்தபடி...அங்கே ஜன்னல் வழி வந்த சூரிய வெளிச்சம்அவளது பட்டு புடவை சூடிய உடலில் பட்டு பள பளத்தது....
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சுந்தரி”
நிச்சியத்திற்கு பின் பாலாஜி போஸ்ட் பைடில் ஒரு மொபைலை சுந்தரிக்கு அளித்திருந்தான், இருவரும் இரவு பகல் என எப்போதும் பேசிகொண்டபடி இருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்திருந்தது. இருவரது சம்பாத்தியத்திலும் பிரெச்சனைகளின்றி குடும்பம் நடத்துவது எப்படி என பல திட்டங்கள் இயற்றப்பட்டன. ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை போதும்மெனவும் குழந்தைக்கு பெயர் சிறந்ததாகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் எனவும் பின்பனி இரவையும் பொருட்படுத்தாமல் பேசி கழித்தனர். அடிக்கடி பாலாஜி சுந்தரியின் அழகை புகழ்ந்து கவிதைகளை சொல்லியபடியும்... இருவரும் முதலிரவு திட்டங்களையும் பேசி அந்த இரவுகளின் குளிருக்கு இதம் தேடிகொண்டனர். “கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு அழுத்தமா ஒரு முத்தம் வேணும்... கிடைக்குமா? உதட்டில்” என்றான் பாலாஜி. எதிர்முனையில் சிரிப்பு சத்தத்துடன் சுந்தரி சம்மதம் தெரிவித்தாள். திருமணத்திற்கு முன்புபே மணமக்கள் இருவரும் தனியே சந்தித்துகொள்ளவது முறையல்ல... கூடாது என்பது கட்டளை. இருந்தும் அச்சட்டம் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் அவ்வபோது தகர்க்கப்பட்டு வந்தது நிஜம் என்றாலும் முத்தத்திற்கான நற்சமயம் மட்டும்ஏனோ பாலாஜிக்குகிட்டவில்லை.
*
#ஒரு ஸப்டில் முத்தத்திற்கான திட்டம் #
பாலாஜி, “உங்க வீட்லேந்து யாரும் வருவாங்களா? ஸ்ரீ” என்றான்.
“இல்ல டா நான் மட்டும் தான் வருவேன் மறக்காம வந்துடு.. என்ன?”
“சரி, நான் உன்ன பாக்கத்தான் வரேன்.. முக்கியமான விஷயம் எனக்கு ஒரு முத்தம் வேணும்”
“என்னது முத்தமா..? சீக்ஸ்லயா லிப்ஸ்லயா?”
“நான் என்ன குழந்தையா?... ஸ்ரீ நாம லவ் பண்ண ஆரம்பிச்சு டூ மந்த்ஸ் மேல ஆகுது தெரியும்ல?”
“கல்யாணத்துல ஒரே கூட்டமா இருக்கும் அதுவும் நான் பொண்ணு பக்கத்துலையே இருக்கனும்.........ஹலோ என்ன அமைதியா இருக்க கோவமா?.. ட்ரை பண்றேன்“
“ட்ரை இல்ல சுயர்... சரி... என்ன டிரஸ்? உன்ன முதல் முதல்ல திருவிழால பாவாட தாவணில பாத்தேனே.. அதுல வரியா?”
“இல்ல.. அல்ரெடி டிசைடட் டா.. ரெட் சாரில வருவேன்” என்றாள் ஸ்ரீமதி
“எனக்கு ஓகே தான் ஸ்ரீ”.
“என்ன சிரிப்பு அடிவாங்கபோற...”
திட்டப்படி திருமண மண்டபத்தின் கார் பார்கிங்ள் இருவரும் சந்தித்தனர்... இரவு நேரம் மழை வரும் சமயம் போல இருந்தது. பார்க்கிங் மின்விளக்கின் வெளிச்சமில்லாத பகுதிக்கு இருவரும் தனி தனியே நகர்ந்து.... அடைந்தனர். பாலாஜியின் இதயம் படபடத்தது... ஸ்ரீ மதி மோகன அழகு... மல்லிகை பூக்களை சூடியிருந்தாள் இருளில் இருவரும் இன்னும் நெருங்கினர்.. பாலாஜி வேண்டிய முத்தத்திற்கான சமயம் இது, இருவரது சுவாசமும் மோதிக்கொள்ள முத்தத்திற்கு இருவரும் தயார். தீடிரென அங்கிருந்த ஸ்விப்ட் கார் ஸ்டார்ட் செய்யப்பட்டு வெளிச்சம் இருவரது முகத்தினையும் கடந்து.. ஸ்ரீ மதி “அய்யோ!” என்றவள் அங்கிருந்து ஓட முற்பட்டாள். பாலாஜி அவளது கைகளை வேகமாக பிடிக்க... அவளது கண்ணாடி வளையல் விழுந்து நொறுங்கியது பின் சிரித்த படி “இங்க வேணாம், யாரது வந்துகிட்டே இருப்பாங்க அப்றமா பாத்துக்கலாம்... நீ ஆச பட்டத செய்யாம இருப்பனாடா?” என்றபடி ஸ்ரீமதி, அவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் விழகி மாடிக்கு சென்றாள். ஸ்விப்ட் கார் வெளிச்சத்தினை வீசியபடி சாலை ஏறியது.
*
#கதைக்குள் குட்டிகதை #
சுந்தரி சமையல் செய்து கொண்டிருந்தபோது அவளது மொபைல் ஒலித்தது இந்த சமயத்தில் பாலாஜி அழைப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை “இப்ப முடியாதே... ஈவ்னிங் பாக்கலாமா?”
கடற்கரையில் சந்தித்தனர், சுந்தரி ”சொல்லுங்க? என்ன முக்கியமான விஷயம் பேசணும்...”
“ஏன்னு... எதுவும் கேட்காத சுந்தரி நாம இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கவேண்டாம், நிறுத்திடுவோம்...ஆனா நான் சொன்னா நடக்காது, முதல்ல நீ “வேண்டாம்” அப்டினு எங்கவீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு... நீயா நிருத்துனதா இருக்கட்டும்... த்ரீ பௌர் மந்த்ஸ்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சுந்தரி... கொஞ்சம் டைம் வேணும்... அப்போ எல்லாம் விவரமா சொல்றேன்” பாலாஜி சுந்தரியிடம் பட படத்த குரலில் சொல்லிவிட... ஸ்ரீமதி யின் வீட்டிற்கு சென்றான்.
“தம்பி, என் பொண்ணு என்கிட்டே எதையுமே சொல்லிடுவாளே....” தொடர்ந்து அழுத சோகம் ஸ்ரீமதியின் அம்மாவின் முகத்தில் தெரிந்தது “உங்க விசயத்தகூட என்கிட்ட ஆரம்பத்துலையே மறக்கல... சொல்லிருக்கா... அவ நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னுதான்... அவங்க அப்பாத்தான் ரொம்ப அடம் பண்ணி... கல்யாணம் பண்ணி வச்சி செத்துபோய்ட்டாரு... இப்ப நிலமைய பாத்திங்காளா?”
“அவ ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டானு தெரியுமா உங்களுக்கு? ஏதும் லெட்டர் எழுதி வச்சிருந்தாளா?”
“இல்லையே...(ஒரு நீண்ட மௌனம் மற்றும் கண்ணீர் தொடைப்பிற்கு பின்)கல்யாணம் பண்ணிகுடுத்தா அப்படியேவா விட்ற போறோம். தம்பி... எந்த ப்ரெச்சனயா இருந்தாலும் சொல்லிருக்கலாமே... கை கொழந்தைய வச்சுக்கிட்டு தூக்கு போட்டுகுற அளவுக்கு எப்படி தைரியம் அவளுக்கு...”
“இப்போ குழந்த எங்க இருக்கு?”
“இங்க... தொட்டில்ல தூங்குறா.. இத்தன வயசுக்கு மேல கை கொழந்தைய வச்சுக்கிட்டு எத்தன வருஷம் காப்பாத்த முடியும்... என்னால? அவ புருசன் அஸ்வினும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப்போறான்... குழந்த...?”
*
#பாலாஜி எதிர்பாராத ஒரு திருப்பம்#
“ஹலோ, சுந்தரியா? நான்தான் பாலாஜி பேசுறேன்...”
“ம்ம்... சொல்....லுங்க..... எப்படி இருக்கீங்க....?” அவளுக்கு தயக்கமாக வார்த்தை வந்தது
“நான் சொல்றத கேட்டு கோவபடாத சுந்தரி , ஸ்ரீமதி ன்னு ஒரு பொண்ண காதலிச்சேன், ஆனா பிரிஞ்சிட்டோம்... கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க..., ஒரு வருசத்துல தற்கொலை பண்ணிகிட்டா... குழந்தை இப்போ அனாதையா இருக்கு... அந்த குழந்தைய நான் வளர்க்கனும்னு வீட்ல சொல்ல போக... ப்ரெச்சென. அதான் கல்யாணத்த தள்ளிபோடலாம்னு சொன்னேன். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குழந்தையையும் வளர்குறதுல உனக்கு ஏதும் ப்ரெச்செனையா?... சொல்லு........ சொல்லு... சுந்தரி ஏன் அமைதியா இருக்க கோவமா?”
“நீங்க சொல்றதுல எனக்கு எந்த கோவமும் இல்ல ப்ரெச்செனையும் இல்ல... ஆனா, எனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் நடக்கபோது, உங்களுக்கு கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொன்னேன் உடனே எங்க அப்பா வேற பையன பாத்துட்டாரு... ரியலெஸ்டேட் பண்றாரு. எங்க அப்பா உங்க வீட்டுக்கு பத்திரிக்கை வச்சாங்களே? உங்க அப்பா உங்கள்ட சொல்லலையா?.............
*
#திருவிழா ஒரு தொடர்கதை (பாகம் இரண்டு) #
சுந்தரியை திருவிழாவில் பார்க்க முடியும் என்று பாலாஜி நினைக்கவில்லை, சுந்தரி தற்போது சற்று எடை போட்டிருந்தாள் ஆனால் பேரிற்கு களங்கமில்லா அழகுக்கு குறைவில்லை. பொதுஇடம்... சந்தித்ததும் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கினர்.
“எப்படி இருக்கீங்க சுந்தரி? உங்கள பார்ப்பேன்னு நினைச்சுப்பாக்கல நான்”
“கிளம்பிட்டீங்களா?எப்போ வந்தீங்க?”
“ஆமாம், ஒன் ஹௌர் மேல ஆகிடிச்சு.. கிளம்பனும்”
“யாரு, இவதான் நீங்க சொன்ன பொண்ணா?” என்றாள் சின்னுவை பார்த்து சிரித்தபடி, சின்னு சுற்றும் வேடிக்கை பார்த்தவாறே இருந்தாள், சுந்தரி சின்னுவை நெருங்கி “உன் பேரு என்ன?” என்றாள் செல்லமாக.
“ஹஸ்மதி” என்றாள் சின்னு.
சின்னு விரும்பிய பொம்மை காரை வாங்கி தந்தாள் சுந்தரி. பின் மூவருமாக ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றனர் “அவளே கார் வேணாம்னு சொன்னா... நீங்க ஏன் இப்போ வாங்குனீங்க?” என்றான் பாலாஜி. சின்னு டேபிளில் காரை உருட்டி விளையாடினாள், மூன்று சாக்கோ ஐஸ்கிரீம்கள் தரப்பட்டன சுந்தரி பிரித்து சின்னுவிற்கு தந்தாள் “கல்யாணமாகி ரெண்டு வருசமாகியும் குழந்தை இல்ல.. என்னால இவளுக்குதான் வாங்கி தர முடியும் இல்லையா?” சிரித்து கொண்டாள். “இவ ரொம்ப லக்கி கேர்ள்... உங்கள மாதிரி ஒரு நல்ல ஆண் அப்பாவா கிடைச்சதுக்கு... எல்லா ஆண்களும் உங்கள மாதிரி நல்லவங்களா இருக்க வாய்ப்பில்ல பாலாஜி, ஒரு குழந்தைக்கு அப்பாவா....”
“நீங்க எப்படி இருக்கீங்க சுந்தரி...? உங்க முகத்துல முன்னாடி இருந்த சந்தோசம் இப்போ இல்லையே”
“ஏதோ இருக்கேன்... சரி நான் கிளம்புறேன் பாலாஜி... மழை வரமாதிரி இருக்கு... உங்கள இன்னைக்கு பார்ப்பேன்னு நினச்சுப்பாக்கல”
“நானும் கிளம்பனும்... மொபைல் வச்சுருகீங்களா சுந்தரி?... நம்பர் என்ன?
பாலாஜி மோட்டார்பைக்கில் சென்று கொண்டிருந்த போது சுந்தரியுடனான பழைய நினைவுகளில் சென்றான். லேசாக தூரிகொண்டிருந்த மழை கனமாக பிடித்தது மூடிகிடந்த டீ கடையின் கூரைக்குள் வண்டியை செலுத்தினான் சின்னு பொம்மை காரை தரையில் இழுத்து செலுத்தினாள்.
“சின்னு பாத்து தண்ணீல விழுந்துடபோகுது.. சின்னு யார்கிட்டயும் உன் பேர் ஹஸ்மதி சொல்லகூடாதுன்னு சொல்லிருக்கேன்ல ஏன் சொன்ன?”
“எனக்கு சின்னு பேர் பிடிக்கல... ஹஸ்மதி தான் பிடிச்சிருக்கு...” என்று தனது முடியை ஒதிக்கி மீண்டும் ஒருமுறை தனது பொம்மை காரை இழுத்து செலுத்தினாள்.
*
#மற்றுமொரு ஸப்டில் முத்தத்திற்கானதிட்டம்#
பாலாஜிக்கு மழை குளிரை உணர்த்தியது, சின்னு காருடன் விளையாடி கொண்டிருந்தாள் அந்த மூடிய டீ கடையில் அலுவலக பணியில் இருந்து திரும்பிய ஒரு இளம் மங்கையும் மழைக்கு ஒதுங்கி நின்றாள், அவள் அழகானவள் என்று பாலாஜி நினைத்தான் பாலாஜியின் சிந்தனை விபரிதமாக வளர்ந்தது. காதலில் ஸ்ரீமதியையும் இழந்துவிட்டோம்... திருமணதிற்கு முடிவெடுத்த வேலையில் சுந்தரியையும் இழந்துவிட்டோம். எந்த அவசியமும் இல்லாமல் இந்த சின்னுவை ஏன் நான் வளர்க்க வேண்டும் இவளால்தான் நான் சுந்தரியை இழக்க நேர்ந்தது என்று எண்ணியவன் சின்னுவை பார்த்தான், சின்னு தொடர்ந்து விளையாடியபடியே இருந்தாள் பின் இருளில் நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்தான்... தற்போது அருகில் நிற்கும் இந்த பெண்ணையும் தான் இழக்க விரும்பவில்லை என்று முடிவெடுத்தான். அவளது அருகில் நகர்ந்தான் அவள் விலகாமல் அங்கேயே நின்று இவனை எதிர்நோக்கினாள், ஒரு முறை தலைதூக்கி அவனை பார்த்துவிட்டு மீண்டும் குனிந்தாள். பாலாஜியின் ஆர்வம் அதிகரித்தது அவளை இன்னும் நெருங்கி அருகில் சென்றான்,அவளிடம் ஒருவித புன்னகை வெளிப்பட்டது... அப்போது அவனது கைபேசி ஒலித்தது.... சுந்தரி என காட்டியது அந்த பெண்மணியிடமிருந்து விலகி வந்தான். எதிர்பார்ப்புடன் “ஹலோ!” என்றான் மெல்ல... எதிர் குரலுக்காக காத்திருந்தான் அவனது இதயம் படபடத்தது.
சுந்தரி,”வீட்டுக்கு போயிட்டீங்களா?”
“இல்ல... நீங்க?”
“மழை பலமாச்சு பெட்ரோல் பங்க் பக்கம் நிக்கிறேன்”
இருவரது உரையாடளுக்கிடையிலும் அதிக மௌனம் தென்பட்டது
“நீங்க நினஞ்சிட போறீங்களோன்னு இப்பதான் நினைச்சேன்”
“ஏன் பாலாஜி வாங்க போங்கன்னு பேசுறீங்க. நீங்க பழையமாதிரியே வா போன்னே பேசலாம்” என்றாள் மெல்லமாக
“உங்களுக்கு சரின்னா அப்படியே பேசுறேன் சுந்தரி” என்று மெல்ல சிரித்து கொண்டான்.
“இங்க யாருமே இல்ல... கொஞ்சம் பயமா இருக்கு நீங்க இங்க வரமுடியுமா... உங்கள்ட பேசணும்னு தோணுது.”
பாலாஜியின் இதயம் மேலும் படபடத்தது கற்பனைகள் வளர்ந்தது... உடனே அங்கே செல்ல முடிவெடுத்தான்.
“சின்னு, மழை நிக்கிற வரைக்கும் இங்கயே இருக்கனும் எங்கயும் போய்ட கூடாது” என்றவன். அருகில் இருந்த பெண்ணிடம் “நீங்க எவ்ளோ நேரம் இருப்பீங்க மேடம்”
“மழை நின்னதும் போகணும்”
“இவள கொஞ்சநேரம் பாத்துக்றீங்களா? ஒரு முக்கியமான வேலை மழை நிக்கிறதுக்குள்ள வந்துட்றேன்...”
அவள் “ப்ரெச்சன இல்ல நான் நீங்க வர வரைக்கும் காத்துருக்கேன்” என்றபடி புன்னகை மாறாமல் சின்னுவின் அருகில் வந்து நின்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ்... உங்க பேரு?” என்றான் தயக்கம் குறையாமல்
“சித்ரா” என்றாள் அதே புன்னகையுடன். “உன் பேர் என்ன?” என்றாள் சின்னுவை பார்த்து. மீண்டும் “ஹஸ்மதி” என்றுதான் பதில் வந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சித்ரா” பாலாஜி சித்ரா இருவரும் முகம்பார்த்து அன்பாக புன்னகை புரிந்து கொண்டனர். பாலாஜி சின்னுவை அனைத்து நெற்றியில் முத்தமிட்டு மோட்டார் சைக்கிளை இயக்கி திருப்பிக்கொண்டு மழையில் நனைந்தபடி விடைபெற்றான்.
எழுத்து
G.T. சத்யா

No comments:
Post a Comment